நம் இயல்பான அமைதிக்கும், மகிழ்ச்சிக்குமான ஒரு நல் சூழலை வழங்குது

தெளிந்தறிநிலைö பற்றி

இங்கு தெளிந்தறிநிலை மற்றும் தியான பயிற்சிகள் பல வடிவமைப்புகளில், மதச்சார்பற்ற முறையில், கலை மற்றும் அறிவியல் வழிமுறைகளில், அன்றாட நடைமுறை வாழ்கைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

இயற்கையான குணப்படுத்துதலுக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் ஒரு நல் சூழலை தந்து முழுமையான நல்வாழ்விற்கு வித்திடுவது இதன் பணி. ஞானம்பெற்ற பல உலக ஆசிரியர்கள் காட்டிய ஒளியை, நவீன முறையில் அதன் சாரம் குறையாமல் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். உலக துன்பங்களைக் குறைப்பதற்கான, தெளிவான அறிவை கொண்ட சமூகம் காணுவது இதன் ஆவல்.

Ö — இது விழிப்புணர்வு மற்றும் ஈகோ-அற்ற மனதிறந்தநிலையை ஒரு குறியீடாக குறிக்கின்றது.

மேலும் படிக்க: தெளிவாக அறிந்து செய்தல்


என்னை பற்றி

நான் சில மரபுமுறைகளில் தெளிந்தறிநிலை மற்றும் தியானம் பயின்று, பயிற்சி பெற்று உள்ளேன். மேலும் ஆசிரியர் பயிற்சியும், சான்றிதழும் (Engaged Mindfulness Institute, USA) பெற்றிருக்கின்றேன்.

மூளைப் பற்றிய அறிவியல் புரிதல்கள் (cognitive and neurosciences) மற்றும் சில திறமைமிக்க ஆசிரியர்கள் மூலமாக தெளிந்தறிநிலை மற்றும் தியானத்தின் ஆழமான புரிதலும், அது எப்படி நம் நல்வாழ்விற்கு மிக அவசியம் என்பதும் ஆழமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. என் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

இதை மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்ற ஆவலில் உருவானதே இந்த பணி.


CK. காமராஜ்