ஒரு வீர பயணத்தின் ஆரம்பம்

தெளிந்தறிநிலை பயிற்சி

தெளிந்தறிநிலை பற்றிய விளக்கங்கள், அதற்கான பயிற்சிகள் அன்றாட நடைமுறை வாழ்கைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படும். இயல்பிலே நமக்கு உள்ள ஆற்றலையும், அறிவையும் முழுமையாக கண்டுகொள்ளுவது இதன் முக்கிய நோக்கம். அது தேர்ந்த, வளமுடைய பல புதிய பரிமாணங்களையும், சாத்தியங்களையும், பாதைகளையும் நமக்கு திறக்கின்றது. அப்போது நம் பிரச்சினைகளை மனதிடத்துடன் அணுகவும், புதிய கோணத்தில் பார்க்கவும், தேர்ந்த முறையில் கையாளவும் முடிகின்றது. அது இயல்பாக நம் மனக்காயங்களை குணப்படுத்தி, மனஅமைதிக்கு வழிவகுக்கின்றது; மனப் போராட்டங்களிலிருந்து விடுதலை தந்து, மகிழ்ச்சிக்கு வழிவகுக்கின்றது.

பயிற்சியின் சில முக்கிய கட்டங்கள்:

  • உடலுக்கும் மனதிற்கும் முறையான ஒத்தியக்கத்தை ஏற்படுத்துதல். நம் உடலுடன் முழுமையான உள்ளடக்கம் (உடலின் உள்ளார்ந்த உணர்வோடு இருப்பது) ஏற்படுத்தி அதன் இயற்கையான அறிவை பயன்படுத்தி கொள்ளுதல்.

  • கட்டுப்பாடற்ற மனதை, அமைதி-நிலைப்படுத்துதல் (சமதா) மூலம் கட்டுப்படுத்தி, அதன் இயற்கையான திடத்தன்மை, தெளிவு மற்றும் பலத்தை கண்டுகொள்ளுதல்.

  • உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களை விழிப்புணர்வுடன் தெளிவாக அறிவதின் மூலம், நம் மனதுடன் நேரடியான நட்பையும் நம்பகத்தையம் வளர்த்துக் கொள்ளுதல்.

  • நம் பழக்கத்தோசத்தின் (எண்ணங்கள், உணர்ச்சிகள், பேச்சு, நடத்தை) பாங்கமைப்புகளையும், எதிர்-செயல்முறைகளையும் (கையாளும் முறைகள்) தெளிவாக அறிந்து கொள்வது. நம் திறனற்ற இயந்திரத்தனமான எதிர்-செயல்முறைகலிலிருந்து விடுபட்டு, ஓர் "இடைவெளி" ஏற்படுத்தி திறமையுடன், தெளிவுடன் கையாள கற்றுக்கொள்ளுதல்.

  • நுண்ணறிவு மற்றும் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் அன்பையும், அச்சமின்மையையும் வளர்த்தல்.

தெளிந்தறிநிலை ஊக்கப் பயிற்சி

தெளிந்தறிநிலை என்பது "சிந்தனையை" விட, நம் நேரடி "அனுபவம்" சார்ந்தது; "செய்கை" என்பதை என்பதை விட, நம் "இருப்பு" நிலையை சார்ந்தது. எனவே தெளிந்தறிநிலைப் பயிற்சியை ஒருவர் அவரின் தற்போதைய நிலையிலிருந்து அணுகுவது மிகவும் பயனுடையது.

நம் வாழ்க்கையில் உள்ள தற்போதைய பிரச்சனைகளை, கஷ்டங்களை, சவால்களை படிக்கற்களாக பயன்படுத்தி, நமக்குள் இருக்கும் உண்மையான ஆற்றலையும், அறிவையும் முழுமையாக கண்டுகொள்ள தெளிந்தறிநிலைப் பயிற்சி உதவும். அதன் மூலம், நம் பயங்களை படிப்படியாக மனதிடத்துடன் எதிர் கொண்டு, மனஅழுத்தம், மனஉளைச்சல், மனச்சோர்வு, உறக்கமின்மை, அடிமை பழக்கம், கோபம், எரிச்சல் தன்மை, தன்னம்பிக்கை குறைவு, கவனக் குறைவு, வேலை மற்றும் உறவு பிரச்சினைகள் போன்றவற்றை தெளிந்த, தேர்ந்த முறையில் அணுக முடியும்.

இப்பயிற்சியின் சில பகுதிகள்:

  • தற்போதைய வாழ்க்கை பிரச்சனைகள், சவால்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தெளிந்தறிநிலை பயிற்சி மற்றும் விளக்கங்களை வடிவமைத்து, அவரின் உண்மையான திறனை வெளிக்கொணர்ந்து, முழுமையான நல்வாழ்வை நோக்கிய பயணத்திற்கு உதவுதல்.

  • தடைகளாக இருக்கும் பழக்கவழக்கங்கள், உள்மன அடைப்புகள், வாழ்வை சுருக்கும் தேவையற்ற நம்பிக்கைகள் போன்றவற்றை திறனுடன் எதிர்கொள்ளுதல்.

  • எண்ணற்ற பொறுப்புகளை, சுமைகளை, தொந்தரவுகளை தெளிவாக புரிந்து கொள்வதன் மூலம், அதை சீர்படுத்தி திறனுடன் அணுகுதல்.

தொலைதூர/ஆன்லைன் பயிற்சி

தொலை கலந்துரையாடல் (வீடியோ கான்பரன்சிங்: FaceTime, Viber, Whatsapp, Duo, Google Chat...) வழியாக தெளிந்தறிநிலை பயிற்சியும், தெளிந்தறிநிலை ஊக்கப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

உங்களுக்கு வசதியான உங்கள் இடம், உங்கள் தேவைக்கேற்ற முறையில் செல்லும் நெகிழ்வான காலவரை.

அனைத்து விபரங்களுக்கும்

தொடர்பு கொள்ளவும்.