நம் உண்மையான இல்லத்தை கண்டுகொள்ளுதல்

தெளிவு —> அறிவு —> சுதந்திரம்

தெளிந்தறிநிலை பயிற்சி

இயல்பிலே நமக்கு உள்ள ஆற்றலையும், அறிவையும் முழுமையாக கண்டுகொள்ளுதல். அது தேர்ந்த, வளமுடைய பல புதிய பரிமாணங்களையும், சாத்தியங்களையும், பாதைகளையும் திறக்கின்றது. அப்போது நம் பிரச்சினைகளை மனதிடத்துடன் அணுகவும், புதிய கோணத்தில் பார்க்கவும், தேர்ந்த முறையில் கையாளவும் முடிகின்றது. மேலும், வாழ்வின் ஆழமான, நாம் அறியாத புதிய வளங்களையும், இன்பங்களையும் கண்டுகொள்ள வழிவகுக்கின்றது.

தெளிந்தறிநிலை ஊக்கப் பயிற்சி

தற்போது நம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை, கஷ்டங்களை, சவால்களை படிக்கற்களாக பயன்படுத்தி, நமக்குள் இருக்கும் உண்மையான ஆற்றலையும், அறிவையும் முழுமையாக கண்டுகொள்ளுதல். அதன் மூலம், நம் பயங்களை படிப்படியாக மனதிடத்துடன் எதிர் கொள்ளுதல்; மனஅழுத்தம், மனஉளைச்சல், மனச்சோர்வு, உறக்கமின்மை, அடிமை பழக்கம் போன்றவற்றை தெளிந்த, தேர்ந்த முறையில் அணுகுதல்.

தொலைதூர/ஆன்லைன் பயிற்சி

தொலை கலந்துரையாடல் (வீடியோ கான்பரன்சிங்: FaceTime, Viber, Whatsapp, Duo, Google Chat...) வழியாக தெளிந்தறிநிலை பயிற்சியும், தெளிந்தறிநிலை ஊக்கப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

உங்களுக்கு வசதியான உங்கள் இடம், உங்கள் தேவைக்கேற்ற முறையில் செல்லும் நெகிழ்வான காலவரை.

கோபம், ஆவேசம், எரிச்சல், பயம், அலுப்பு, மனச்சோர்வு, ஏக்கம், அடிமை பழக்கம் - போன்றவற்றை பழக்கதோசமாக எதிர்கொள்வதற்கு பதிலாக, அவற்றை திறனுடன் தேர்ந்த முறையில் கையாள உதவும் இடைவெளியையும் சுதந்திரத்தையும் தெளிந்தறிநிலை நமக்கு தருகின்றது.

தெளிந்தறிநிலை என்றால் என்ன?

தெளிந்தறிநிலை (mindfulness) என்பது கவனமுடன், அக்கறையுடன், விழிப்புணர்வுடன், தெளிவாக அறியும் நிலை.

நாம் அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே நம் மனதை பொறுத்தே உள்ளதால், அது அவ்வாறு செயல்படுகின்றது என்பதை நன்கு அன்யோன்யமாக தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா?